கோபி, நம்பியூர் ஒன்றியங்களில் கிருமி நாசினி தெளிப்பு இயந்தரங்களை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்

கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நிவாரணநிதியும், கோபி, நம்பியூர் ஒன்றியங்களில் கிருமி நாசினி தெளிப்பு இயந்தரங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.


" alt="" aria-hidden="true" /> கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நியாய விலைகடையில்  அரசு பொது மக்களுக்கு வழங்க அறிவித்த உதவி தொகை மற்றும் விலையில்லா பொருட்களை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும்  இன்று புதிதாக வழங்கப்பட்ட 632ஸ்மார்ட் கார்டு பயனாளிகளுக்கும்  இன்றே உதவி தொகை மற்றும் விலையில்லா பொருட்களை வழங்கினார்.  தொடர்ந்து கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குட்பட்ட 21 கிராம ஊராட்சிகளுக்கும், நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட 15 கிராம ஊராட்சிகளுக்கும்  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு கிருமி நாசினி தெளிக்கும் இயந்திர கருவிகள் மற்றும் தூய்மைப்பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர்  வழங்கி ஆலோசனை கூறினார்.
இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர்கள் சிவ சங்கர், வெங்கடேஸ்வரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஷீர், பாவேசு, குணசேகரன்,  ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், சிறுவலூர் மனோகரன்,யூனியன் சேர்மன்கள் கே. பி  மௌதீஸ்வரன், சுப்பிரமணியம் , நகர கழக செயலாளரும் சொசைட்டி தலைவருமான காளியப்பன், முன்னாள் நகராட்சி சேர்மன் கந்தவேல் முருகன்,மாவட்ட கவுன்சிலர்கள் அனுராதா, கௌசல்யாதேவி, பேரூர் கழக செயலாளர்கள் கருப்பண்ண கவுண்டர், சேரன் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் (கோபி )இந்துமதி பாண்டுரங்கசாமி, சத்தியபாமா வேலுமணி, கோபாலன்,வனிதா வேலுசாமி, யூனியன் கவுன்சிலர்கள் பங்க்  செல்வராஜ்,திலகவதி வாசுதேவன்,வேல்முருகன், சந்திரசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்(நம்பியூர் )பழனிசாமி, மணிகண்ட மூர்த்தி , மகுடேஸ்வரன்,குப்பு சாமி,திருமூர்த்தி,தேவி,செந்தாமரை, யூனியன் கவுன்சிலர்கள் அமுதா கண்ணன் ஒன்றிய துணை தலைவர்,  மனோன்மணி, கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Popular posts
1000 போலீசாருக்கு பிரியாணி, மாஸ்க்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்
Image
லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி - மார்ச் 1-ந்தேதி முதல் அமுலுக்கு வருகிறது
Image
டி.என்.பாளையம், கணக்கம்பாளையம் ரேசன்கடைகளில் அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் ஆய்வு
Image
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image