டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை - தலைமை காவலர் ஒருவர் உயிரிழப்பு

" alt="" aria-hidden="true" />

 

டெல்லி:

 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.

 

இந்நிலையில், டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்தார்.


 

கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர் ரத்தன் லால். இவர் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். 


 

இதையடுத்து டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தார் ஆகியோர் இன்று மாலை டெல்லியில் உள்ள ஆக்ராவிற்கு சென்று தாஜ்மகாலை பார்வையிடுகின்றனர்.  இதன் காரணமாக டெல்லி மாநகரில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது


Popular posts
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image
1000 போலீசாருக்கு பிரியாணி, மாஸ்க்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்
Image
கோபி, நம்பியூர் ஒன்றியங்களில் கிருமி நாசினி தெளிப்பு இயந்தரங்களை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்
Image
காயல் அப்பாஸ் வேண்டு கோள் - ஊரடங்கும் உத்தரவுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
Image
டி.என்.பாளையம், கணக்கம்பாளையம் ரேசன்கடைகளில் அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் ஆய்வு
Image