இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்க தயார் - டிரம்ப் பேச்சு
 

" alt="" aria-hidden="true" />

அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:-

 

இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியாவிற்கு தர இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன. 



இந்தியாவும், அமெரிக்காவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பை அமெரிக்கா ஒடுக்கி உள்ளது. நட்புடன் வந்தால் வரவேற்போம், பயங்கரவாதிகளுக்கு எங்களது எல்லை மூடப்பட்டிருக்கும்.


 

தெற்காசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்கா தயாராக உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்.

 

இவ்வாறு அவர் பேசினார்

Popular posts
1000 போலீசாருக்கு பிரியாணி, மாஸ்க்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்
Image
டி.என்.பாளையம், கணக்கம்பாளையம் ரேசன்கடைகளில் அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் ஆய்வு
Image
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image
லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி - மார்ச் 1-ந்தேதி முதல் அமுலுக்கு வருகிறது
Image
கோபி, நம்பியூர் ஒன்றியங்களில் கிருமி நாசினி தெளிப்பு இயந்தரங்களை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்
Image